Friday, August 8, 2008

சிங்கப்பூரில் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

INSHA ALLAH TO BE SOON PUBLISHED,ANY QUERY E-MAIL ME .fasuha81@gmail.com

மக்கா-மதினா அதிவேக நவீன இரயில் திட்டம்

மக்கா-மதினா அதிவேக இரயில் போக்குவரத்து திட்டத்திற்கு சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹஜ் மற்றும் உம்ரா புனிதப் பயணங்களில் புதிய வசதியை ஏற்படுத்தித் தரும் இத்திட்டத்தின் மதிப்பு சுமார் 20 பில்லியன் சவுதி ரியால் (சுமார் 5.33 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும்.

இப்புதிய திட்டம் தரும் வசதியின்படி, மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய அதி நவீன இரயிலில், 30 நிமிடத்தில் மக்காவிலிருந்து ஜித்தாவிற்கும், 2 மணிநேரத்தில் மதினாவிற்கும் செல்ல முடியும் என்று சவுதி அரேபியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் டாக்டர் ஜபாரா அல் ஸராய்ஸ்ரி தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் சுமார் 500 கி.மீ புதிய அதிநவீன மின்சார இரயில் பாதை மக்கா-ஜித்தா-மதினாவிற்கு இடையே போடப்படும். இப்புதிய இரயில்பாதை அதிநவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த தகவல் தொடர்பையும் உள்ளடக்கியதாக இருக்கும். சவுதி அரேபியாவின் நவீன போக்குவரத்தை இத்திட்டம் மேலும் அதிகப்படுத்தும் என்பதாகத் தெரிகிறது.

இரயில் பாதை அமையும் இடங்களுக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களை மதிப்பிட பிரத்யேக கமிட்டி அமைக்கப்பட்டு உரிய தொகையை நிலத்தின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. ஜித்தா இஸ்லாமிய துறைமுகம், மன்னர் அப்துல் அஜீஸ் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் ராபிக் நகரில் உள்ள மன்னர் அப்துல்லாஹ் தொழிற்நுட்பப் பூங்கா ஆகிய இடங்களில் இதற்கான இரயில் நிலையங்கள் அமையும்.

அல்-ராஜி குழுமம், சவுதி பின்லாடின் குழுமம், சவுதி ஓஜர் குழுமம், சவுதி ஜப்பானிஸ் குழுமம், அல்ஷோலாஹ் குழுமம் மற்றும் OHL பன்னாட்டு குழுமம் ஆகிய ஆறு பெரிய குழுமங்கள் இத்திட்டத்திற்கான டென்டர்களில் போட்டியிடும் என்று தெரிகிறது.

இத்திட்டத்தின் கீழ் குறைந்த நேரத்தில் நவீன வசதியுடன் பாதுகாப்பான முறையில் சுமார் வருடத்திற்கு 10 மில்லியன் உம்ரா மற்றும் ஹஜ் பயணிகள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தினால் 2010-ல் சுமார் 500 மில்லியன் சவுதி ரியால்கள் ஆண்டு வருமானமாக எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டமானது சவுதி அரேபியாவின் மிகப் பெரிய இரயில் திட்டங்களான (சுமார் 950 கி.மீ. தூரம்) ஜித்தா-ரியாத் மற்றும் (சுமார் 115 கி.மீ. தூரம்) தம்மாம்-ஜுபைல் இரயில் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.

செல்போனின் தரத்தை அறிவது எப்படி?

காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது, இன்ஷா அல்லாஹ் பாதிப்புகள் குறித்து பிறகு வரக்கூடிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம்.

இந்த செய்தியின் மூலம் நாம் வாங்கியிருக்கின்ற அல்லது வாங்கப்போகின்ற செல்போன்களின் தரம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். அதாவது நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் தரம் உயர்ந்த அல்லது குறைவான அல்லது போலியான பொருட்கள் மார்க்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் செல்போனின் தரத்தை எதனை அடிப்படையாக கொண்டு நிர்ணயிப்பது பற்றி அறிவோம்.

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று)

7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்)

7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான்;. தரம் குறைந்த பொருள் மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்)

மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான பொருள்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜித்தாவில் மிதவை தண்ணீர் சுத்திகரிப்புக்கூடம்

தற்போது ஜித்தாவில் நிலவுகின்ற தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக, மிதவை கடல்நீர் சுத்திகரிப்புக்கூடம் ஏப்ரல் இறுதியில் கரையை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உற்பத்திக் கூடம் ஏற்கனவே செங்கடலை அடைந்திருந்தாலும், ஜித்தாவை நோக்கிய தன் பயணத்தில் தற்போது இருக்கிறது. இதுபோன்ற மற்றொரு உற்பத்திக்கூடமும் மே மாத இறுதியில் ஜித்தாவின் கடற்கரையை வந்தடையும். இதனால் ஜித்தாவின் தண்ணீர் தட்டுப்பாடு வெகுவாக நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு கப்பல்களும் மிகப்பெரிய டீசல் இயந்திரங்களின் மூலம் கடல்நீரை சுத்திகரிக்கும் உற்பத்திக்கூடங்களாகும். இவை இரண்டும் ஏழே மாதங்களில் உருவாக்கப்பட்டு சாதனைப்படைத்திருக்கிறன. சாதாரணமாக இதுபோன்ற மிதவை கடல்நீர் சுத்திகரிப்புக்கூடம் உருவாக சுமார் இரண்டு வருடங்கள் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தினால், கிழக்கு ஜித்தாவின் அருகாமை பகுதிகளும், அல்-ரெய்ஹைலி மற்றும் அஸ்ஃபான் ஆகிய வடக்கு பகுதிகளும் தென்பகுதியிலுள்ள பழைய மக்கா ரோடு ஆகிய பகுதிகளும் பயன்பெறும்.

இவ்வருட இறுதியில் முடிவடைய இருக்கும் சுஐபா-3 தண்ணீர் சுத்திகரிப்பு திட்டத்தினால் ஜித்தாவின் தண்ணீர் தட்டுப்பாடு நிரந்தரமாக நீங்கும் என்று தெரிகிறது. இத்திட்டத்தினால் 1.3 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் கிடைக்கும். இவ்வுற்பத்திக்கூடம் 550,000 கியூபிக் மீட்டர் தண்ணீரை ஜித்தாவிற்கு வினியோகம் செய்யும்.

சுமார் 9.1 பில்லியன் சவூதி ரியால் மதிப்புள்ள சவுதி அரேபியாவின் முதல் “சுதந்திரமான தண்ணீர் மற்றும் மின்சாரத் திட்டம்” (Independent water and power project - IWPP) உருவாக நவம்பர் 2005-ல் சவூதி மற்றும் மலேசிய தனியார் குழுமங்களுடன் சவூதி அமைச்சகம் ஒப்பந்தம் செய்துக்கொண்டது. இத்திட்டத்தின் பயனாக தினந்தோறும் 194 மில்லியன் பீப்பாய்கள் தண்ணீரும் 900 மெகா வாட்ஸ் மின்சாரமும் கிடைக்கும். இத்திட்டத்தின் முதல் பிரிவு அக்டோபர் 13-ல் (2008) செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியா அரசாங்கம் “தேசிய நீர் நிறுவனத்தை” 22 பில்லியன் சவுதி ரியால் செலவில் தொடங்கியது. இத்திட்டமானது நிலத்தடி நீர், குடிநீர் வினியோகம், மற்றும் கழிவு நீர் பகுப்புத் திட்டம் ஆகியவற்றிற்கு வர்த்தக ரீதியாயாக அனைத்து வகையில் சேவையாற்றி வருகிறது.

தற்போது அமைச்சகம் தனியார் மயமாக்கல் பற்றி கலந்தாலோசித்து ரியாத், மதினா, ஜித்தா, தம்மாம், அல்கோபர் ஆகிய நகரங்களில் சர்வே செய்து கொண்டிருக்கிறது. முதல் முதலாக தனியார் மயமாக்கல் நாட்டின் 50 சதவீதம் தண்ணீர் மற்றும் கழிவுநீர் சேவைகளை உள்ளடக்கிய மேற்கூறிய ஐந்து நகரங்களில் தொடங்கும். இதில் முதலாவதாக சவூதியின் தலைநகரமான ரியாத்திலிருந்து தொடங்கி வைக்கப்படும்.

இவ்வகையில் உருவாகும் புதிய நீர் நிறுவனம், தகுதி சார்ந்த மாற்றங்களை நாட்டின் தண்ணீர் உற்பத்தி மற்றும் வினியோக முறையில் காட்டும் என்று எதிபார்க்கப்படுகிறது. உலகிலேயே அதிக அளவு கடல்நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துவது சவூதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது.

டாடாவின் (TATA) அதீத வளர்ச்சி

வளர்ந்து வரும் நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் உலகளவில் பேசப்பட்டுக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு சற்று மேலான செய்தி ஒன்று கடந்த மார்ச் 26-ல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது பணக்காரர்களின் (ஐரோப்பிய) ஆடம்பர “கார்”களாக (European luxury brands) கருதப்படும் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் கம்பெனிகளை ஃபோர்ட் நிறுவனத்திடமிருந்து, இந்தியாவின் டாடா குழுமம் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது என்ற செய்திதான் அது.

டாடா குழுமம் “ஒரு லட்ச ரூபாய்” (உலகின் மிகக் குறைந்த விலை) காரினை கடந்த ஜன-10, 2008ல் அறிமுகம் செய்தபோதே, டாடா தனது எதிர்கால இலக்கில் உறுதியாக இருப்பதை பறைசாற்றியது. ஏனெனில், 2005-ல் குறைந்த விலை கார் முயற்சியில் இறங்கியபோது பலர் கிண்டலும்,கேலியும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களில் மட்டும், டாடா நிறுவனம் வாங்கிய மிகப் பெரிய சொத்துக்களின் பட்டியல்:

பிப்ரவரி 2000-ல் இங்கிலாந்தின் டெட்லே (Tetley) நிறுவனத்தை 432 மில்லியன் டாலருக்கு வாங்கி உலகின் இரண்டாவது (Packaged) டீ நிறுவனமாக மாறியது.

பிப்ரவரி 2004-ல் தென் கொரியாவின் டாய்வோ குழுமத்தை (Daewoo Group) 102 மில்லியன் டாலருக்கு வாங்குவதற்கு கையெழுத்தானது.

ஆகஸ்ட் 2004-ல் சிங்கப்பூரின் லோன் ஸ்டீல் மில்லர் மற்றும் நாட்ஸ்டீல் நிறுவனங்களை (lone steel miller, NatSteel Ltd) 286 மில்லியன் டாலருக்கு டாடாவின் ஸ்டீல் குழுமம் வாங்கியது.

ஜுன் 2005-ல் அமெரிக்க நிறுவனமான எய்ட் ஓ கிளாக் காஃபி கம்பெனியை (Eight O’Clock Coffee Co) 220 மில்லியன் டாலருக்கு டாடாவின் காபி நிறுவனம் வாங்கியது.

ஜுலை 2005-ல் வி.எஸ்.என்.எல் நிறுவனம் அமெரிக்க நிறுவனமான டெலிகுளோப் இண்டெர்நேஷனல் ஹோல்டிங் லிமிடெட் (Teleglobe International Holdings Ltd)-ஐ 239 மில்லியனுக்கு வாங்கியது. மேலும் டைய்கோ பன்னாட்டு கடல்வழி ஃபைபர் ஆப்டிக் கேபில் நெட்வொர்க் (Tyco International’s global undersea fibre optic cable network unit)-ஐ 130 மில்லியன் டாலருக்கு வாங்கியது.

ஆகஸ்ட் 2006-ல் டாடா தேயிலை நிறுவனம், யு.எஸ் என்ஹேன்ஸ்டு வாட்டர் ஃபர்ம் எனர்ஜி பிராண்ட் நிறுவனத்தை (U.S. enhanced water firm Energy Brands Inc) 677 மில்லியன் டாலருக்கு வாங்கியது.

ஜனவரி 2007-ல் டாடா ஸ்டீல் நிறுவனம், ஆங்கிலோ டட்ச் ஸ்டீல் மேக்கர் கோரஸ் குழுமத்தை (Anglo-Dutch steelmaker Corus Group) 13 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இதுவே இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய கையகப்படுத்தலாக கருதப்படுகின்றது.

மார்ச் 2007-ல் டாடா பவர் நிறுவனம், இந்தோனேசியாவின் இரண்டு எண்ணெய் சுரங்கங்களை 1.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது.

ஜனவரி 2008-ல் டாடாவின் கெமிக்கல்ஸ், யு.எஸ் சோடா-ஆஸ் உற்பத்தி (U.S. soda-ash producer General Chemical Industrial Products Inc) நிறுவனத்தை 1.01 பில்லியன் டாலருக்கு வாங்கியது.

மேற்கண்ட உதாரணங்களில் டாடாவின் சிறிய சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்குவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்களை ஃபோர்டு நிறுவனம் விற்றுவிட முடிவு செய்தபோது, இதனை வாங்கிக்கொள்ள இந்தியாவின் டாடா நிறுவனமும், “மகேந்திரா அண்ட் மகேந்திரா” நிறுவனமும் போட்டி போட்டன. இந்நிலையில் ஜாக்குவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் கம்பெனிகளின் தொழிலாளர்கள் யூனியனின் கூட்டமைப்பு, எங்கள் நிறுவனத்தை ஃபோர்டு நிறுவனம் விற்பதானால் அதை டாடா நிறுவனத்திற்கு விற்கட்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தது. இதன் காரணம், கார் உற்பத்தியில் டாடா நிறுவனம் ஏற்கனவே புகழ் பெற்றது. மேலும் அவர்களுக்கு நல்ல உற்பத்தி திறன் இருக்கிறது என்று தொழிலாளர் யூனியன் கருதியது. இங்கிலாந்தில் கோவன்ட்ரி, பர்மிங்ஹாம், லிவர்பூல் ஆகிய இடங்களில் இருக்கும் ஜாகுவார் தொழிற்சாலையில் 10 ஆயிரம் ஊழியர்கள் இருக்கிறார்கள். வெஸ்ட் மிட்லாண்ட் மற்றும் வார்விக்ஷயரில் இருக்கும் லேண்ட்ரோவர் தொழிற்சாலையில் 9 ஆயிரம் ஊழியர்கள் இருக்கிறார்கள்.

ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்கள் பணக்காரர்களின் மத்தியில் உயர்ந்த மதிப்பைப் பெற்றிருந்தாலும்கூட மற்ற ஆடம்பர கார்களுடன் ஒப்புமைப் படுத்தும்போது அதன் விற்பனை விகிதம் குறைந்திருப்பதும், ஜாகுவார் பிராண்டினால் ஏற்கனவே ஃபோர்ட் நிறுவனம் பல இழப்புகளை சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1999 வருடத்திலிருந்து லேண்ட் ரோவரின் விற்பனை, 29 ஆயிரம் எண்ணிக்கை முதல் 46 ஆயிரம் எண்ணிக்கை வரை 2008-ன் இறுதிக்குள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜாக்குவார் 35 ஆயிரத்திலிருந்து 17 ஆயிரம் எண்ணிக்கையாக குறைந்திருக்கிறது. எனவே பொருளாதார நோக்கர்களின் எண்ணமெல்லாம், டாடாவின் “லேண்ட் ரோவர் தேர்வு”, ஜாக்குவாரை விட சிறந்தது என்பதுவேயாகும்.

சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலக நாடுகள் அனைத்தும் கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை தனியார் துறை நிறுவனங்கள் என்றால் அது மிகை அல்ல. வெற்றிகரமாக இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய கட்டாயத்தையும் இந்திய நிறுவனங்கள் எதிர் நோக்குகின்றன. வெகுவேகமாக மாறிவரும் சூழலுக்கேற்ப தங்கள் நடவடிக்கைகளையும் மாற்றிக்கொண்டு இந்திய நிறுவனங்களும் வேகமாக முன்னேறுகின்றன. அதற்கான சமீபத்திய உதாரணம் டாடா குழுமம்.

டாடா குழுமம் தனக்கான ஒரு எதிர்கால இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி பயணிப்பதாகத் தெரிகிறது. கிடைக்கும் வாய்ப்புகளை மிகத்திறமையுடன் பயன்படுத்திக் கொள்ளும் டாடா குழுமம் மற்ற இந்திய நிறுவனங்களுக்கு ஒரு முன்னோடியாகவும் திகழ்கிறது.

Wednesday, August 6, 2008